Registration Under Trust Number

263/2004

Registration U/s 12aa

135/04-05

Registration U/s 80G

c.no.102/91/cit-ii/2004-05

FCRA Registration Number

076110029/22.02.2008

Central Socila Welfare Board REG

TN/00028812

Ruby ESTHER - HISTORY

 

Ruby easther

Founder of Ruby Children Home

ரூபி எஸ்தர் அம்மாவின் சரிதை


இவர்கள் 1922 அக்டோபர் மாதம் 2ந் தேதி பிறந்தார்கள். இவர்கள் தன்னுடைய 11வது வயதில் தன் தாயை இழந்தார்கள்.

இவர்கள் தான் வீட்டின் முதல் பிள்ளை . இவர்களுக்கு கீழ் 6 சகோதர சகோதரிகள் இருந்தார்கள். இவர்கள் 11 வயதிலிருந்து Children Homeல் இருந்து படித்து வந்தார்கள். வெள்ளைக்கார மிஸி அம்மாவிடம் இருந்து இவர்கள் கற்றுக் கொண்டது ஏராளம்.

அங்கேயே 8ம் வகுப்பு வரை படித்து பின்பு ஊழியத்ஸ்தானத்தில் திருநெல்வேலி பழைய வண்ணராப் பேட்டையில் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியரானார். பின்பு 1945 ல்
இவருக்கும் திரு ராஜையா அவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 பெண் பிள்ளைகள். 6 பேரில் 4 பெண் பிள்ளைகள் ஆசிரியர்கள். தங்களுடைய உழைப்பால் உயர்ந்த குடும்பம்.

1982ல் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்பு சும்மா வீட்டில் இருப்பது என்று யோசித்த அம்மா அவர்களுடைய அண்ணணிடம் (சென்னை) சென்று தனக்கும் ஒரு ஆதரவு அற்ற பிள்ளைகள் காப்பகம் வைத்து தருமாறு கோரியுள்ளார்.

அவர்கள் அண்ணன் இந்திய குழந்தைகள் காப்பக டைரக்டராக இருந்தார். எனவே 1984ல் அக் டோபரில் இந்த Ruby Children Home யை தொடங்கினார்கள்.

30 முப்பது பிள்ளைகளை வைத்து தொடங்கிய ஹோம் 60 பிள்ளைகளாக கூடியது. அவர்களே பிள்ளைகளுக்கு தலைசீவி விடுதல் , பேண், பொடுகு வந்தால் சுத்தம் செய்து மருந்து போட்டு சுகப்படுத்துவார்கள். பெண் பிள்ளைகள் எப்படி இருக்கவேண்டும் மென்ற நல்லொழுக்கம் , கீழ்ப்படிதல் , தன சுத்தம் போன்றவைகளை முறையாக கற்றுக் கொடுத்தார்கள்.

எத்தனையோ ஏழை எளிய பிள்ளைகள் +2 வரை படித்து விட்டு சென்றுள்ளார்கள். +2 வரை படித்து விட்டு சென்றவர்கள் சுமார் 1000 மேல் இருக்கும். இந்த ஹோமின் தனிசிறப்பு தொடங்கிய நாள் முதல் இன்று வரை 10-- , +2 தேர்வில் ஒரு பிள்ளைகள் கூட பெயிலானது கிடையாது என்பது தனிச்சிறப்பு. கல்வியிலும், ஒழுக்கத்திலும் தன் பிள்ளைகள் போல் பேணி காத்து வந்தார்கள். சிறு பிள்ளைகள் பிராக் பாவாடை எல்லாம் அவர்களே தைத்து கொடுப்பார்கள். பிள்ளைகளுக்கு வித விதமாக தைத்து கொடுப்பதில் அவர்களுக்கு வல்லவர் அவரே. இப்படியாக இந்த விடுதி வளர்ந்து மற்றவர்களுக்கு சாட்சியாக திகழ்ந்தது. வயது முதிர்வு காரணத்தால் தன்னுடைய மகள் கி. பரிமளா அவர்களிடம் பொறுப்பை கொடுத்து விட்டார்கள். அவர்களும் தன தாய்க்கு ஈடாக இந்த விடுதியை நடத்திக் கொண்டு வருகிறார்கள். ரூபி எஸ்தர் அவர்கள் 95வது வயதில் (12.04.2017) அன்று இயற்கை எய்தினார்.கடவுளின் கிருபையினால் அம்மாவின் ஆசியானாலும் இனிதே நடந்து வருகிறது. உதவும் கரங்கள் உதவினால் இன்னும் சிறப்பாக நடத்த முடியும்